Connect with us

டெல்லியை வச்சு செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

Featured

டெல்லியை வச்சு செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய கொல்கத்தா அணி டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் KKR – DC அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி யை இந்த போட்டியில் கட்டுப்படுத்தும் முனைப்பில் கொல்கத்தா அணி பந்துவீசியது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரிதிவி மற்றும் பிரஸ்ஸர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த நடு வரிசை மற்றும் பின் வரிசை அனைவரும் கொல்கத்தா அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற டெல்லி அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்க முடியாமல் போனது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 153 ரன்கள் மட்டுமே குவித்தது. இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் நரைன் 15 ரன்களும் சால்ட் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்களில் வெளியேற ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் அதிரடியாக விளையாடி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது தங்களது அணியை வெற்றிபெற செய்தனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்களின் பிரிவு குறித்து வரும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஏற்புடையதல்ல - மீண்டும் ஒரு வேதனைப் பதிவை போட்ட ஜி.வி.பிரகாஷ்..!!

More in Featured

To Top