Connect with us

இரும்பு ராடால் ஊழியரை தாக்கிய கேஜிஎஃப் விக்கி கைது..!!

Cinema News

இரும்பு ராடால் ஊழியரை தாக்கிய கேஜிஎஃப் விக்கி கைது..!!

இரும்பு ராடால் ஊழியரை தாக்கிய வழக்கில் துணிவு பட நடிகரும் பாஜக முன்னாள் இளைஞரணி நிர்வாகியுமான கேஜிஎஃப் விக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேஜிஎஃப் என்ற துணி கடையின் மூலம் யூடுப் உலகில் பேமஸ் ஆனவர் தான் கேஜிஎஃப் விக்கி இவர் கொடுக்கும் அதிரடி ஆபருக்கும் இவரது பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதையடுத்து சென்னையின் பல இடங்களில் தனது துணி கடைகளை திறந்துள்ள இவர் தற்போது ஒரு செலிபிரிட்டி போலவே வலம் வருகிறார்.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது துணிக்கடையில் பணிபுரிந்த ஊழியர் ₹1 லட்சம் கையாடல் செய்து தலைமறைவாகி, மீண்டும் அவர் வேலை கேட்டு வந்தபோது விக்கி அடியால் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த ஊழியர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய விக்கியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்துள்ளனர்

இந்நிலையில் விக்கி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் விக்கியை சிறையில் அடைத்தனர்

அடிக்கடி குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் 7 மாதங்களுக்கு முன்பே பாஜகவில் இருந்து கேஜிஎஃப் விக்கி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விரைவில் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் - தயாரிப்பாளர் கொடுத்த டக்கர் அப்டேட்..!!

More in Cinema News

To Top