Connect with us

இந்தியை அழித்த நடிகை கீர்த்தி சுரேஷ்! ரகு தாத்தா படத்தின் செம Promo Video!

Cinema News

இந்தியை அழித்த நடிகை கீர்த்தி சுரேஷ்! ரகு தாத்தா படத்தின் செம Promo Video!

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதமே கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களை வரிசையாக ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.

ஹோம்பலே நிறுவனம் தயாரிப்பில் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் ‘ரகு தாத்தா’ எனும் படத்தில் நடித்துள்ள நிலையில், விரைவில் அந்த படம் ரிலீஸ் ஆகப் போவதாக தற்போது அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் டீச்சராக நடித்துள்ளாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ள ப்ரோமோவில் கீர்த்தி சுரேஷ் போர்டில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்த்தையை அழித்து விட்டு ரகு தாத்தா படத்தின் டைட்டில் போடும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் சிரித்தாலே அதை வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்து காமெடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் அறிவிப்புக்காக “ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை வயிறு குலுங்க சிரிக்க சிரிக்கவைக்க வருகிறது, ரகு தாத்தா. விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்…” என கேப்ஷன் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக செம காமெடி ட்ரீட் ரசிகர்களுக்கு விரைவில் வெயிட்டிங் என தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பை மண்ணில் பேட்டிங்கில் தடுமாறிய ஹைதராபாத் - மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top