Connect with us

கவின் நடிப்பில் உருவான ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!!

Cinema News

கவின் நடிப்பில் உருவான ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!!

கவின் நடிப்பில் படுபயங்கரமாக உருவாகி உள்ள ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது

தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின் . சின்னத்திரையில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவருக்கு இன்று உலககெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏறுமுகம் கண்ட கவினுக்கு முதல் படமே தாறுமாறான வெற்றியை கொடுத்தது .

இதையடுத்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்த கவினுக்கு அப்படமும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது கணேஷ் கே பாபு இயக்கிய இந்த படமும் கவினுக்கு அசத்தலான வெற்றியை தேடி தர தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் ரசிகர்களின் ஆசைக்கினைங்க ஸ்டார் படத்தில் இருந்து ஒரு சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

ஸ்டார் ;படத்தின் ரிலீஸ் தேதியை தான் படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் வரும் மே 10ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அழகிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இதுவரை கவின் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில் ஸ்டார் படமும் அவருக்கு வெற்றியை தேடி தருமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனி ஆளாக போராடிய ருதுராஜ் - பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top