Connect with us

கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய கவின் – அதிர்ச்சியில் உறைந்த தயாரிப்பாளர்கள்..!!

Cinema News

கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய கவின் – அதிர்ச்சியில் உறைந்த தயாரிப்பாளர்கள்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரம் நடிகர் கவின் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற மெகா ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பெற்றவர் தான் கவின்.

சீரியலை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய கவினுக்கு முதல் படமே தாறுமாறான வெற்றியை கொடுத்தது .

இதையடுத்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்த கவினுக்கு அப்படமும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது கணேஷ் கே பாபு இயக்கிய இந்த படமும் கவினுக்கு அசத்தலான வெற்றியை தேடி தர தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதுவரை கவின் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில் ஸ்டார் படமும் அவருக்கு வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் கவின் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அதன்படி நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்திற்கு 7 கோடி வரை சம்பளம் கேட்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த மண்ணில் ஜொலிக்குமா DC..? டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு..!!!

More in Cinema News

To Top