Connect with us

கேப்டன் மகன் படத்திற்கு தியேட்டர் இல்லையா? ரிலீஸ் தள்ளிவைப்பு!

Featured

கேப்டன் மகன் படத்திற்கு தியேட்டர் இல்லையா? ரிலீஸ் தள்ளிவைப்பு!

படைத்தலைவன் திரைப்படம் குறித்த ஒரு முக்கியமான செய்தியை இப்போது பகிரவிருக்கிறோம். இயக்குநர் அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படைத்தலைவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர், நம்மவர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இந்த படம் முதலில் மே 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் தகவலில், திரையரங்குகள் கிடைக்காததாலே படம் தற்காலிகமாக ரிலீஸாகவில்லை என தெரிவித்துள்ளார். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், ரசிகர்கள் புரிந்துகொள்வதற்காகவும், தங்களது ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

சண்முக பாண்டியன், தன் அப்பா போலவே சினிமாவில் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சில திரைப்படங்கள் சரியாக ஓடாததால், மிகுந்த கவனத்துடன் கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதே சமயம் அவரது சகோதரர் விஜய பிரபாகரன், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, கேப்டனின் மனைவி பிரேமலதாவுடன் தேமுதிக கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார்.

இந்நிலையில், “படைத்தலைவன்” திரைப்படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் கேப்டன் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை, படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “கேப்டனின் கண்களைப் போலவே சண்முக பாண்டியனின் கண்களும் இருக்கிறது. வளர்ந்து வாருங்கள், ரமணா 2 எடுக்கலாம்” என்று கூறியதும், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top