Connect with us

கங்கை அமரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி: காரணம் என்ன?

Featured

கங்கை அமரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி: காரணம் என்ன?

கங்கை அமரன், தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை கொண்ட பிரபலர், தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறுகின்றார். இவர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் பின்னணி பாடகர் ஆகிய பன்முக திறமைகளுடன் தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இளையராஜாவின் சகோதரர் மற்றும் கலைஞனாக அறியப்படும் கங்கை அமரன், 1979 ஆம் ஆண்டில் “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும், “கரகாட்டக்காரன்” படத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

இவருக்கு தற்போது 77 வயது ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் படப்பிடிப்பின் போது, அவர் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக, அவர் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேலதிக சிகிச்சைக்காக மதுரை நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டள்ளார். 

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top