Connect with us

கமலின் நடிப்பால் போதை ஏறாமல் கடுப்பான ரஜினி!.. பி.வாசு கூறிய அதிர்ச்சி சம்பவம்!

Featured

கமலின் நடிப்பால் போதை ஏறாமல் கடுப்பான ரஜினி!.. பி.வாசு கூறிய அதிர்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படங்களில் ஒன்று நாயகன். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை ரசிகர்களிடையே தனிச்சிறப்பை பெற்றிருக்கிறது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம், மும்பையை சேர்ந்த வரதராஜன் முதலியார் என்ற உண்மையான கதாநாயகனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. சமுதாயத்தின் கீழ்த்தட்டத்தில் இருந்து உயர்ந்தவராக உருவெடுக்கும் வேலு நாயக்கரின் வாழ்க்கையை இந்தப் படம் ஆழமாகச் சொல்லும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இப்படம் குறித்து கூறிய அனுபவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இயக்குநர் பி.வாசு ஒரு பழைய பேட்டியில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, “நாயகன் போன்ற ஒரு திரைப்படத்தில் நீங்கள் இன்னும் நடிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்திடம் சொன்னேன். அதற்குப் பதிலாக அவர் ஒரு சம்பவத்தை பகிர்ந்தார். நாயகன் படத்தை பார்த்துவிட்டு, மூன்று ரவுண்ட் மது அருந்தினேன். பிறகு உடனடியாக கமல்ஹாசனுக்கு தொலைபேசியில் அழைத்து, நான் அருந்திய மதுவை விட வேலு நாயக்கரின் போதை அதிகமாக இருந்தது என்று கூறினேன்” என பி.வாசு தெரிவித்தார். இந்த உரையாடல் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. இது, ரஜினி – கமல் நட்பின் ஓர் உணர்ச்சிபூர்வ தருணத்தையும், நாயகன் திரைப்படத்தின் தாக்கத்தையும் மீண்டும் நினைவூட்டுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடிதடியும் கலவரமும் சூழ்ந்த பிக் பாஸ் வீடு! திவாகர் நெஞ்சில் எட்டி மிதித்த விஜே பார்வதி!

More in Featured

To Top