Connect with us

தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் – பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு..!!

Featured

தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் – பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு..!!

தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 19 ஆம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயதை குடித்த 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருபக்கம் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க மறுபக்கம் ஒவ்வொருவராக உயிரிழந்து வந்தனர். இதையடுத்து மருத்துவமனைகளில் அழுகுரல்கள் விடாமல் கேட்க தொடங்க அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சிக்கு படையெடுத்து வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம் இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த 10க்கும் மேற்பட்டோர் அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top