Connect with us

ஜெயம்ராம் மகன் காளிதாஸ் ஜெயராம், தாரிணியுடன் திருமணம்: ரசிகர்களின் வாழ்த்துக்கள்..

Featured

ஜெயம்ராம் மகன் காளிதாஸ் ஜெயராம், தாரிணியுடன் திருமணம்: ரசிகர்களின் வாழ்த்துக்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ஜெயம்ராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், இன்று தனது காதலியான தாரிணியுடன் திருமணம் முடித்துள்ளார். காளிதாஸ் கடந்த சில ஆண்டுகளாக தாரிணியுடன் காதலித்து வந்தார், மற்றும் அவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது.

திருமணம் இன்று காலை 7.15 மணிக்கு கேரளாவின் குருவாயூர் கோயிலில், சுபமுஹூர்த்தத்தில் நடைபெற்றது. சென்னையில் முன்னதாக பிரமாண்டமாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் நடந்த நிலையில், கேரளாவில் திருமணம் நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் மேரேஜ் ரிசப்ஷனையும் கேரளாவில் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திருமணம் குறித்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top