Connect with us

40வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடிய நடிகை காஜல் – இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!

Featured

40வது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடிய நடிகை காஜல் – இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வெற்றி பெற்றவர் நடிகை காஜல் அகர்வால். 2007ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் லட்சுமி கல்யாணம் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு மகேஷ் பாபு, விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம், அவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்பவரை காஜல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நீல் (Neil) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி காஜல் அகர்வால் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளை குடும்பத்துடன் மாலத்தீவுகளில் சிறப்பாக கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தன்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top