Connect with us

சென்னை வந்தாலும் வீட்டுக்கு வராத ஜோதிகா… மனைவிக்காக புதிய வீடு கட்டும் சூர்யா!

Featured

சென்னை வந்தாலும் வீட்டுக்கு வராத ஜோதிகா… மனைவிக்காக புதிய வீடு கட்டும் சூர்யா!

நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) புதியதாக ஒரு பிரம்மாண்ட வீடு கட்டி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில், சிவகுமார் குடும்பத்திற்கு சொந்தமான பெரிய வீடு உள்ளது. அந்த வீட்டில், நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மனைவி லட்சுமி, சூர்யா – ஜோதிகா, கார்த்தி – ரஞ்சினி ஆகியோர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஜோதிகாவின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரைப் பார்த்துக்கொள்ளும் நோக்கிலும், குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டு, சூர்யா மற்றும் ஜோதிகா மும்பைக்கு மாறினர். படப்பிடிப்புகளுக்காக இருவரும் அடிக்கடி சென்னை வந்தும் செல்கின்றனர்.

ஆனால், ஜோதிகா சென்னை வந்தாலும் தியாகராய நகரில் உள்ள வீட்டில் தங்காமல், ஹோட்டலில் தங்குவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, “ஏன் ஜோதிகா அந்த வீட்டில் தங்க மறுக்கிறார்?” என்ற கேள்வி சமூக வட்டங்களில் எழுந்தது.

இந்த சூழ்நிலையில், ஜோதிகா சென்னை வரும்போது தங்குவதற்காகவும், தனித்துவமான விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், சூர்யா ECR பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை, மூத்த பத்திரிகையாளர் அந்தணன் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Featured

To Top