Connect with us

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி : காலிறுதிக்கு முன்னேறி கெத்து காட்டியது இந்திய ஆடவர் அணி..!!

Featured

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி : காலிறுதிக்கு முன்னேறி கெத்து காட்டியது இந்திய ஆடவர் அணி..!!

மலேசியாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற இந்தியா – கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பச்சமில்லாமல் நடைபெற்று வருகிறது .

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் இந்த தொடரில் திறமை வாய்ந்த பல அணிகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .அனல் பறக்க நடைபெற்ற இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய ஆடவர் அணி அடுத்தடுத்து பல கோல்களை போட்டு அபார வெற்றி பெற்றது .

ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 10-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்திய இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் காலிறுதிக்கு முன்னேறி கெத்து காட்டி உள்ளது.

இந்திய அணியின் இந்த அபார ஆட்டத்திற்கு விளையாட்டு துறைகளை சார்ந்த பல வீரர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top