Connect with us

திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்

Cinema News

திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்

ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின் அசத்தலான நடிப்பில் உருவான திரைப்படம் கோ . கடந்த 2011 ஆம் ஆண்டும் இப்படத்தில் கார்த்திகா, அஜ்மல், பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், போஸ் வெங்கட், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்ட்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

மிக குறுகிய பட்ஜெட்டில் அரசியல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .

ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது .

அதன்படி இப்படம் மார்ச் 1, 2024 அன்று தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இப்படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் தற்போது அவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான கோ படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜொலிக்கப்போவது யார்..? இன்று ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top