Connect with us

ஜெயிலர் 2 எப்போது முடிகிறது? ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

Featured

ஜெயிலர் 2 எப்போது முடிகிறது? ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் ‘கூலி’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை முடித்த கையோடு தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் பாலகிருஷ்ணா நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ரஜினிகாந்தை சந்தித்து, ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது, எப்போது நிறைவடையும் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ஜெயிலர் 2 படப்பிடிப்பு நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நிறைவடையலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top