Connect with us

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ரஜினியுடன் நெல்சனின் பிறந்தநாள் கொண்டாட்டம்! புகைப்படங்கள் இதோ..

Featured

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ரஜினியுடன் நெல்சனின் பிறந்தநாள் கொண்டாட்டம்! புகைப்படங்கள் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார், கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படம் மூலம் அபார வெற்றியைப் பெற்றார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம், உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் எனப் புகழப்பட்டது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றினார். மேலும், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். முதல்பாகம் பெற்ற மாபெரும் வரவேற்புக்கு பிறகு, தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த சந்தோஷமான தருணங்களைப் பதிவு செய்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top