Connect with us

Fans mood: இது தான் தீபாவளி gift-ஆ? மொக்கை வாங்கிய பிரதீப்

pradeep (2)

Cinema News

Fans mood: இது தான் தீபாவளி gift-ஆ? மொக்கை வாங்கிய பிரதீப்

Pradeep in Dude: ‘கோமாளி’ படத்தால் இயக்குநராக அறிமுகமான பிரதீப், அந்த படத்திலேயே ஆட்டோ டிரைவராக கேமியோவில் தோன்றினார். அதன் பிறகு அவர் இயக்கி ஹீரோவாக நடித்த ‘லவ் டுடே’ — சர்வதேச அளவிலே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

இந்த வருடம் வெளியான தனுஷின் இட்லி கடை, விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி, சிவகார்த்திகேயனின் மதராஸி கூட டிராகன் படத்தின் வசூலை தொட முடியவில்லை.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் நான்காவது படமான ‘டியூட்’, விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ படத்தை முந்தி தீபாவளி ரிலீஸாகி பெரிய Opening வசூலை அள்ளியது — சுமார் ₹10 கோடி வரை என்று கூறப்படுகிறது .

ஆனால், விமர்சன ரீதியில் ‘டியூட்’க்கு எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவ் ரிவ்யூஸ் வரவில்லை. ரசிகர்கள் கூறுவது — “கதை, திரைக்கதை இரண்டும் பலவீனமா இருக்கு; மமிதா பைஜுவின் கதாபாத்திரமே மீம் பொருளாகி விட்டது!”
டியூட் டிரைலரிலேயே ஸ்டோரி புரிந்து விட்ட ரசிகர்கள், பாடல்களையும் ட்ரோல் செய்தனர். அதனால் தான் இப்போது நெட்டிசன்ஸ் கூறுவது:

“இதுக்கு LIK படமே தீபாவளிக்கு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” இப்போது ரசிகர்கள் அடுத்ததாக வரும் LIK படத்தில்தான் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். டிசம்பரில் சரவெடி கன்ஃபார்ம் என்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Cinema News

To Top