Connect with us

மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் – வெளியான ருசிகர தகவல்..!!

Cinema News

மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் – வெளியான ருசிகர தகவல்..!!

மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி அதிக லாபத்தை ஈட்டிய ‘Manjummel Boys’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

பொதுவாக மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால் மாஸ் பட்ஜெட் படங்களை விட மினிமம் பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெற்றி படங்களாக உருவெடுப்பதாக ஒரு விமர்சனம் உள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் நடப்பாண்டில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான பல மலையாள படங்கள் ஸ்பேர் டூப்பர் ஹிட் அடித்தது அந்த படங்களில் ஒன்று தான் மஞ்சும்மெல் பாய்ஸ்.

அனைத்து மொழிகளிலும் தூள் கிளப்பிய இப்படம் தமிழ் ரசிகர்கள் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழிலும் சக்கை போடு போட்டது . இதுமட்டுமின்றி ரசிகர்களை தாண்டி இப்படத்தை திரைபிரபலங்கள் பலரும் மனதார பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில் ‘Manjummel Boys’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெறும் கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் திரையிட தேர்வாகி உள்ளதாகவும் . இந்த நிகழ்வுக்குத் தேர்வான முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையைப் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனியாச்சும் கவனமா இருங்க - வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

More in Cinema News

To Top