Connect with us

குவைத் தீவிபத்தில் பலியான இந்தியர்கள் – த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்..!!

Cinema News

குவைத் தீவிபத்தில் பலியான இந்தியர்கள் – த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்..!!

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டின் மங்காப் நகரில் கடந்த ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என தனது இரங்கல் செய்தியில் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  15 ஆண்டுகள் தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடிய மணிமேகலை – ஜீ தமிழில் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

More in Cinema News

To Top