Connect with us

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களில் இந்தியர்கள் மூன்றாம் இடம் – வெளியான அதிர்ச்சி தகவல்

Featured

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களில் இந்தியர்கள் மூன்றாம் இடம் – வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களில் இந்தியர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக எல்லை தாண்டி நுழைந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை Pew நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக எல்லை தாண்டி நுழைந்த வெளிநாட்டவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் இருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த Pew நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா பேரிடருக்கு பிறகு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . சுமார் 7.25 லட்சம் இந்தியர்கள் அங்கு சட்ட விரோதமாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் அதிகம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில இந்தியர்கள் கனடா வழியாகவும் சில இந்தியர்கள் மெக்சிகோ வழியாகவும் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வதாகவும் Pew நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top