Connect with us

ஒரு வருடத்தை கடந்த ‘இந்தியன் 2’ – வசூல் விவரம் வெளியாகியது!

Featured

ஒரு வருடத்தை கடந்த ‘இந்தியன் 2’ – வசூல் விவரம் வெளியாகியது!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன் 2. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஜெகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பில் ராக்ஸ்டார் அனிருத் ஒலி இசையை வழங்கியிருந்தார். மிகுந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான பிறகு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையிலும் கலந்த விமர்சனங்களை சந்தித்தது. சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட இந்த திரைப்படம், தற்போது வெளியானதிற்கு ஒரு வருடம் ஆன நிலையில் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தோல்வியை சந்தித்த இந்தியன் 2 திரைப்படம், மொத்தமாக ரூ.150 கோடியை கடந்த அளவில் மட்டுமே வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக்பாஸ் வீட்டில் அரோரா – இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் செய்தோர் எதிர்பாராத அதிர்ச்சி!

More in Featured

To Top