Connect with us

பார்வையற்றோர் இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

Sports

பார்வையற்றோர் இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

பெங்களூரு,
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி அர்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனையுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடரின் முழு நீளத்திலும் இந்திய அணி தோல்வியின்றி முன்னேறி, தங்களின் திறமை, ஒருங்கிணைப்பு மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தியது.

இந்த முக்கிய சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய மகளிர் அணியைப் பாராட்டி, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதில்,“பார்வையற்றோருக்கான முதலாவது T20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். தொடர் முழுவதும் தோல்வியே இன்றி கோப்பையை வென்ற விதம் சிறந்த மன உறுதி, கட்டுப்பாடு, கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு. அணியின் ஒவ்வொரு வீராங்கனையும் உண்மையான சாம்பியன்கள். உங்கள் வெற்றி எதிர்கால தலைமுறையினருக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும். அடுத்தடுத்த முயற்சிகளிலும் சிறப்பான வெற்றிகள் கிடைக்க எனது வாழ்த்துக்கள்”
என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணியின் இந்த வரலாற்றுச் சாதனை, பார்வையற்றோருக்கான விளையாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் எதிர்கால விளையாட்டு திறமைகளுக்கும் புதிய ஊக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு போட்டியிலும் பதக்கம் கிடைப்பது சாத்தியமில்லை.” – மனு பாக்கர்

More in Sports

To Top