Connect with us

நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும் – நடிகர் கமல்ஹாசன் காரசார பதிவு..!!

Featured

நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும் – நடிகர் கமல்ஹாசன் காரசார பதிவு..!!

ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜேசன் சஞ்சய் விமான நிலையத்தில் காட்டிய செயலால் ரசிகர்கள் பரபரப்பு!

More in Featured

To Top