Connect with us

“சீரியல் நடிச்சா சினிமாவா கிடையாதா? தயாரிப்பாளர்களிடம் ஹேமா வைத்த கோரிக்கை!”

Cinema News

“சீரியல் நடிச்சா சினிமாவா கிடையாதா? தயாரிப்பாளர்களிடம் ஹேமா வைத்த கோரிக்கை!”

விஜய் டிவியில் பல வருடங்களாக ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆரம்பத்தில் அண்ணன்–தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டிருந்தது. தற்போது, அப்பா–மகன் உறவைச் சுற்றி கதை நகர்கிறது. சமீபத்திய எபிசோடுகளில், பழனி பாண்டியன் வைத்திருந்த அதே இடத்தில் கடை திறந்தது பெரிய பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த இரு சீசன்களிலும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட முகமாக மாறியவர் நடிகை ஹேமா. தற்போது நெல்லை பாய்ஸ் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அவர், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய கசப்பான அனுபவங்களை நேர்மையாக பகிர்ந்துள்ளார்.

“நான் பல படங்களின் ஆடிஷன்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது ‘நீங்கள் சீரியல் நடிகை தானே?’ என்று எங்களை தனியாக ஒரு வரிசையில் நிறுத்துவார்கள். குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களுக்குத்தான் அழைப்பார்கள்,” என்று ஹேமா கூறினார்.

இத்தகைய அணுகுமுறைகள் தன்னை மனமுடையச் செய்ததாகவும், “சினிமா பக்கம் வரவேண்டாம்… சீரியலே போதும், அங்கே நான் ராணியாக இருப்பேன்” என்று எண்ணும் நிலைக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சீரியல்களில் பலர் மிகுந்த திறமையுடன் இருப்பதை குறிப்பிடும் அவர், “தயவுசெய்து சீரியல் நடிகர்களுக்கும் திரைப்படங்களில் நல்ல வாய்ப்புகளை வழங்குங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் வேண்டுகோள் வைத்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிஎஸ்கேவில் இணைந்தார் சஞ்சு சாம்சன் — அதிகாரப்பூர்வ அறிவிப்பு

More in Cinema News

To Top