Connect with us

வாக்குச்சாவடிக்கு வந்தும் என்னால் வாக்களிக்க முடியவில்லை – நடிகர் சூரி வேதனை..!!!

Cinema News

வாக்குச்சாவடிக்கு வந்தும் என்னால் வாக்களிக்க முடியவில்லை – நடிகர் சூரி வேதனை..!!!

படப்பிடிப்பில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஓடி வந்தும் என்னலால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பொது மக்கள் திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்தனர் .

இந்நிலையில் படப்பிடிப்பில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஓடி வந்தும் என்னலால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க நடிகர் சூரி வந்திருந்தார் . அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி கூறியதாவது :

கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். யாரோட தவறு என்று தெரியவில்லை. ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா – சல்மான் கானுடன் புதிய படம்?

More in Cinema News

To Top