Connect with us

ஓடிடியில் வெளியாகிறது ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ – எப்போது தெரியுமா..?

Cinema News

ஓடிடியில் வெளியாகிறது ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ – எப்போது தெரியுமா..?

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் கந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ஃபைட்டர் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் குடியரசு தினத்தையொட்டி கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஃபைட்டர்’. ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

ஹிரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த இப்படம் கதையை தாண்டி அதன் ஆக்சன் காட்சிகளுக்காக பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் நாளை (மார்ச் 21) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்: திருமணத் தேதி குறித்து புதிய தகவல் வெளியீடு

More in Cinema News

To Top