Connect with us

பஜாஜ் பல்சரை ஓவர்டேக் செய்த ஹோண்டா ஷைன்..!!

Featured

பஜாஜ் பல்சரை ஓவர்டேக் செய்த ஹோண்டா ஷைன்..!!

இந்தியாவில் நடப்பாண்டில் பஜாஜ் பல்சரை ஓவர்டேக் செய்து ஹோண்டா ஷைன் பைக் சாதனை படைத்துள்ளது.

2024ன் முதல் 7 மாதங்களில் இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனங்கள் பட்டியலில், பஜாஜ் பல்சரை பின்னுக்குத் தள்ளி, ஹோண்டா ஷைன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது . இப்பட்டியலில் ஹீரோவின் ஸ்பெலண்டர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை, சுமார் 10,47,217 ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் விற்பனையில் 115.3% வளர்ச்சி கண்டுள்ளது. கிராமப்புற மக்கள் இந்த பைக்கை அதிகம் விரும்பி வாங்குவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் பஜாஜ் , ஹீரோ , ஹோண்டா உள்ளிட்ட வாகனங்களை அதிகம் விரும்பி வாங்கி வருவதால் இந்த 3 இல் ஹீரோவின் ஸ்பெலண்டர் பைக் ஒவ்வொரு வருடமும் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top