Connect with us

GV பிரகாஷின் ‘REBEL’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! எப்போது தெரியுமா?!

Cinema News

GV பிரகாஷின் ‘REBEL’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! எப்போது தெரியுமா?!

தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்பவர் GV பிரகாஷ். ஒரு பக்கம் இசையமைப்பில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஹீரோவாக அவர் நடித்து முடித்த படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் GV பிரகாஷ் ‘ரிபெல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் குறித்து பேசும் இந்த படம் இதுவரை வெளியே தெரியாத மூணாறு மக்களின் பல விஷயங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GV பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 10 மணிக்கு அவெளியானது. இந்நிலையில் படம் வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மமிதா பஜிலு என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வெங்கடேஷ், ஷாலு ரஹிம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போடு வெறித்தனம் வெறித்தனம் - வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்..!!!

More in Cinema News

To Top