Connect with us

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் சொத்து மதிப்பு –பிறந்தநாள் ஸ்பெஷல்

Featured

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் சொத்து மதிப்பு –பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் அக்கா மகனாக அறியப்படும் ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது நடிகராகவும் பாடகராகவும் சிறப்பாக பெயர் பெற்றுள்ளார். இசையமைப்பாளராக முதல் முறையாக “வெயில்” என்ற படத்தில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷுக்கு இந்த படமே செம ஹிட் தரவாக இருந்தது. அதற்கு முன்பு “ஜென்டில்மேன்” என்ற படத்தில் பாடகராக அறிமுகமான இவர் தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். விவேக் இயக்கத்தில் உருவான “13” என்ற படம் ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் ஹாரர் கிரைம் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்பின், ஜி.வி. பிரகாஷ் “Trap City” என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதேபோல், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான “இடிமுழக்கம்” படத்தில் நடித்துள்ளார். பிரபல பாடகி சைந்தவியுடன் ஜி.வி. பிரகாஷ் 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகள் பிறந்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

இன்று 39வது பிறந்தநாளை கொண்டாடும் ஜி.வி. பிரகாஷின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளராக பல்துறையில் மிளிரும் ஜி.வி. பிரகாஷின் சொத்து மதிப்பு 80 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top