Connect with us

அரசுப் பள்ளி ஆசிரியைகள் இனி சுடிதார் அணியலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு

Featured

அரசுப் பள்ளி ஆசிரியைகள் இனி சுடிதார் அணியலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள் பள்ளிக்கல்வித்துறை விதிகளுக்கு உட்பட்டு சுடிதார் அணிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதிவேந்தன் ஆகியோர், ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது :

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் இனி சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம் . ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை. நமது பெருமையின் அடையாளம் .

தமிழ்நாட்டின் கல்வியில் அரசு பல்வேறு நல்ல திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது வருங்கால தலைமுறை நல்ல வழியில் கல்வி பயின்று நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்திட நமது அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Featured

To Top