Connect with us

ஆளுநர் ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Featured

ஆளுநர் ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கி உள்ளதுபோல் தெரிகிறது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது :

கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது.

ஆளுநர் R.N.ரவி அவர்களுக்கு ‘மீடியா மேனியா’நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது தினந்தோறும் தன்னைப் பற்றிஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்.

அந்தஅதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசட்டப்பேரவைகள் சட்டமியற்றும்வழக்கமானபணிகளை முறியடித்துவிட முடியாதுஎன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள் அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராகதன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.

ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது ஆசையை அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி வழங்கலாம்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து.

அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் RN.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ – ஜாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது.

அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?

நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார்.

வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

See also  அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top