Connect with us

மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வரும் வெறித்தனமான டிரைலர்!

Featured

மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வரும் வெறித்தனமான டிரைலர்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி, யூடியூபில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றது.

இப்படத்தில் அஜித், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. டீசரை தொடர்ந்து, “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், எதிர்பார்த்த டிரைலர் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் இம்மாதம் இறுதியில் துவங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top