Connect with us

போடு வேற லெவெலு – சூரி நடிக்கும் கருடன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

Cinema News

போடு வேற லெவெலு – சூரி நடிக்கும் கருடன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

சூரி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் 1 st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று பல படங்களில் நாயகனாக தமிழ் திரையுலக கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.

இவரது நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் சூரியின் நடிப்பு திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்நிலையில் இவரது நடப்பில் தற்போது இரு புதிய படம் உருவாகி உள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டுள்ளது .

வெற்றிமாறனின் கதையில் எதிர்நீச்சல் புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் முத்திரகனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

கருடன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்றத்துடன், கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக நடிகர் சூரி நடிக்கும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் சூரி வெற்றியை தேடி தருமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top