Connect with us

விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

Featured

விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான க்ளென் மேக்ஸ்வெல் விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் உலக கோப்பை பல வென்று அசுர பலம் கொண்ட அணியாக திகழும் ஆஸ்திரேலியா அணியில் இளம் நட்சத்திர வீரராக வலம் வருபவர் க்ளென் மேக்ஸ்வெல் . தனது சொந்த அணியை தாண்டி இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி உடனான நட்பு குறித்து க்ளென் மேக்ஸ்வெல் மனம் திறந்து பேசியுள்ளது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

RCB-யில் நான் சேர்ந்தபோது முதலில் எனக்கு மெசேஜ் செய்தது விராட்தான். பிறகு நான் இன்ஸ்டாகிராமில் அவரை தேடினேன். அவரின் ID கிடைக்கவில்லை. விராட்டை சந்தித்தபோது என் சந்தேகத்தை கேட்டேன். அதற்கு அவர் “டெஸ்ட் போட்டியின்போது நீ என்னை கிண்டல் செய்ததால் BLOCK செய்தேன்” என்றார். அதற்கு பிறகு அவர் என்னை UNBLOCK செய்துவிட்டார். நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம் என க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top