Connect with us

“கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு படம்! தீடிரென அடுத்த பட Plan சொன்ன கெளதம் மேனன்!”

Cinema News

“கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு படம்! தீடிரென அடுத்த பட Plan சொன்ன கெளதம் மேனன்!”

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து வரும் கெளதம் மேனனின் புதிய படமான துருவ நட்சத்திரம் வரும் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ரா. பார்த்திபன், அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துருவ நட்சத்திரம் பட புரொமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் கெளதம் மேனன், அங்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டியில் சிறிது நேரம் வர்ணனையில் ஈடுபட்டார்.

அவருடன் ஆர்ஜே பாலாஜி, முன்னாள் கிரி்கெட் வீரர் பத்ரிநாத் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது கிரிக்கெட் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்த கெளதம் மேனன், முழுக்க கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக வைத்து படம் இயக்கும் எண்ணம் இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக கெளதம் மேனன் கூறியதாவது, “எனது படங்களில் கிரிக்கெட் விளையாட்டு ஏதாவது ஒரு வகையில் தொடர்புபடுத்தியிருப்பேன்.

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவை கிரிக்கெட் வீரராக காட்டியிருப்பார். விண்ணைதாண்டி வருவாயா படத்தில் சிம்பு பைட் சீன் கிரிக்கெட் விளையாடும்போது நிகழ்வதாக இருக்கும். துருவ நட்சத்திரம் படத்தில் கூட கிரிக்கெட் இணைத்து பேசி வசனங்கள் இடம்பிடித்திருக்கும். இதை ட்ரெய்லரில் கூட பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் முழுக்க கிரிக்கெட்டை பின்னணியை வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளது. கிராமத்திலிருந்து சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் இருவரும் தேசிய அணிக்காக விளையாடுவது போன்ற கதையோ யோசித்துள்ளேன்.

சச்சின், கங்குலியை அடிப்படையாக வைத்து இந்த கதையை உருவாக்கவுள்ளேன்” என்றார். முன்னதாக கெளதம் மேனன் பேசும்போது தனது மகன்கள் மூன்று பேருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது இருக்கும் ஆர்வம் குறித்து பேசினார். இதில் மூத்த மகன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக ஒரு சீசனில் விளையாடியது பற்றியும் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top