Connect with us

எங்களிடம் இல்லாத பணமா? கொட்டி கிடக்குது!” – கங்கை அமரன் அதிரடி பதில்..

Featured

எங்களிடம் இல்லாத பணமா? கொட்டி கிடக்குது!” – கங்கை அமரன் அதிரடி பதில்..

இசைஞானி இளையராஜா, குட்பேட் அக்லி படத்தில் தன்னுடைய மூன்று பாடல்கள் அனுமதி இல்லாமலே பயன்படுத்தப்பட்டதாகக் காப்பிரைட் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் பெரிய விவாதத்துக்கே காரணமா இருக்கு. இது பற்றி அவரது தம்பி, இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் கேட்டபோது அவர் கொஞ்சம் கடுப்பாகத்தான் பதில் சொல்லிருக்கிறார்.

“அண்ணனிடம் இல்லாத பணமா? பணம் கொட்டி கிடக்குது. செலவழிக்க முடியாம திரும்பி வருது. பணத்துக்காக வழக்கு போடுவார்னு சொல்றதெல்லாம் நியாயமில்ல!” இது ஒரு நிகழ்ச்சியில் கங்கை அமரனின் நேரடி பதில்தான். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு அவர் இன்னும் ஸ்ட்ராங் பதில்களைக் கொடுத்தார்.

“நாங்க போட்ட பாட்டைதான் மக்கள் ரசிக்கிறாங்க. அது வெற்றி அடைய நாங்க போட்ட பாட்டுக்கே பங்கு இருக்கிறதுதானே? அதைத்தான் அண்ணன் கேட்கிறார்.” அவர் மேலும் சொல்றார் – “முன்னாடியே அனுமதி கேட்டிருந்தா, என் அண்ணன் கண்டிப்பா ‘இலவசமா எடுத்துக்கோங்க’னு சொல்றவர்தான்.”

இதோட ஒரு சாமான்ய கேள்விக்கு அவர் கொடுத்த பதிலும் வைரலாகி வருது. “உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கே, ஏன் மத்தவங்களுக்கு உதவலாமே?”னு கேட்டாங்க. அதுக்கு அவர் பதில் – “நாங்க சம்பாதிச்சது நாங்க உழைச்சதால்தான். எங்களோட வாரிசுகள் பயன்படுத்தி வராங்க. நீங்களும் உழைச்சு சம்பாதிங்க. நாங்க உதவி செய்றோம், ஆனா அதை விளம்பரம் பண்ணுவதில்லை.” இளையராஜாவின் பாடல்கள், அனுமதியின்றி பயன்படுத்த முடியாது என்பதையே மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் கங்கை அமரன்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top