Connect with us

குழந்தை நட்சத்திரத்திலிருந்து கதாநாயகியாக… சாரா அர்ஜுனின் வளர்ச்சியை காட்டும் வைரல் போட்டோஷூட்!

Cinema News

குழந்தை நட்சத்திரத்திலிருந்து கதாநாயகியாக… சாரா அர்ஜுனின் வளர்ச்சியை காட்டும் வைரல் போட்டோஷூட்!

Deivathirumagal’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தவர் நடிகை Sara Arjun. அதனைத் தொடர்ந்து ‘Saivam’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது இயல்பான நடிப்பால் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துவந்த சாரா அர்ஜுன், சமீபத்தில் வெளியான ‘Thurandhar’ படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், குழந்தை நட்சத்திரம் என்ற அடையாளத்திலிருந்து முழுமையான கதாநாயகியாக அவர் வெற்றிகரமாக மாறியிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது ‘Euphoria’ மற்றும் ‘Thurandhar 2’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை சாரா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது மாற்றம், நம்பிக்கையுடன் கூடிய தோற்றம் மற்றும் ஸ்டைலிஷ் லுக் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்மானிக்கும் நாள்

More in Cinema News

To Top