Connect with us

‘Blue Star’ படத்தின் அட்டகாச வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!!

Cinema News

‘Blue Star’ படத்தின் அட்டகாச வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!!

திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் ப்ளூ ஸ்டார் படத்தின் அமோக வெற்றியை தற்போது படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .

மினிமம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தி சாந்தனு ஆகியோருடன் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் கடந்த 25 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .

வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள இப்படத்தின் வெற்றியை தற்போது படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Cinema News

To Top