Connect with us

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து பாடகி சித்ரா கருத்து!

Cinema News

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து பாடகி சித்ரா கருத்து!

உத்தர பிரேதச மாநிலம் அயோத்தி யில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. அன்று, வீட்டில் விளக்கேற்றி ராம மந்திரத்தை உச்சரிக்குமாறு பாடகி சித்ரா வீடிேயா ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் போது அனைவரும் ராம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வீட்டில் ஐந்து திரிதீபம் ஏற்ற வேண்டும். அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிேறன்.

லோக சமஸ்தா சுகினோ பவந்து” என தெரிவித்துள்ளார். இப்போது இது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடகர் சூரஜ் சந்தோஷ், “மசூதியை இடித்து கோயில் கட்டப்பட்டு இருக்கும் வரலாற்றை மறந்துவிட்டு ’லோக சமஸ்தா சுகினோ பவந்து’ என கூறுவோரின் அப்பாவித்தனம் ஹைலைட்டாக இருக்கிறது.

எத்தனைச் சிலைகள் ஒவ்வொன்றாக உடையப்போகிறது? இன்னும் எத்தனை சித்ராக்கள் தங்களின் உண்மையான நிறத்தை காட்டுவார்கள்?” என தெரிவித்துள்ளார். அதேபோல் பலர் சித்ராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “பாபர் மசூதி அழிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை எந்த மதச்சார்பற்ற மனிதனும் ஏற்க முடியாது” என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

பாடகர் ஜி.வேணுகோபால் அவருக்கு ஆதரவாக வெளியிட்டுள்ளப் பதிவில், “சித்ராவுக்கு எதிரான கருத்துகள் தன்னை காயப்படுத்தியதாகவும் கருத்துவேறுபாடு இருந்தால் அவரை மன்னிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே கேரள அமைச்சர் சஜி செறியான் கூறும்போது, “அயோத்தி ராமர் கோயில் குறித்த பாடகி சித்ரா-வின் கருத்தை சர்ச்சையாக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கேப்டன்’ நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி..!!

More in Cinema News

To Top