Connect with us

“நடிப்பில் இனி உங்களுக்கு சாதிக்க எதுவும் மீதம் இல்லை! நடிகர் கமலுக்கு வாழ்த்து கூறிய சீனியர் நடிகர்!”

Cinema News

“நடிப்பில் இனி உங்களுக்கு சாதிக்க எதுவும் மீதம் இல்லை! நடிகர் கமலுக்கு வாழ்த்து கூறிய சீனியர் நடிகர்!”

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை என சீனியர் நடிகர் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நாளை பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை உலகை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமலஹாசனுக்கு சீனியர் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நடிப்பு கலையில் அசகாய சூரர்கள் என்று நாம் மதித்து போற்றுபவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும் தான்.

அவர்கள் செய்த வெரைட்டி ரோல்களை இதுவரை வேறு யாராலும் செய்ய முடியவில்லை. எட்டு படங்களில் நாம் சேர்ந்து நடித்தோம். வில்லன் வேடங்களில் நடித்து ஹீரோவாக உயர்ந்த முதல் ஹீரோ நீங்கள்தான்.

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் திரையில் சாதித்ததை அரசியலிலும் சாதிக்க முடியும் என்று துணிந்து இறங்குங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬🔥 ‘ROOT’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட ரஜினி – படக்குழுவுக்கு பாராட்டு

More in Cinema News

To Top