Connect with us

கல்வி விருது விழாவில் மாணவிக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கிய விஜய் – மேடையிலே நெகிழ்ச்சி!

Featured

கல்வி விருது விழாவில் மாணவிக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கிய விஜய் – மேடையிலே நெகிழ்ச்சி!

நடிகர் விஜய்யின் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர்களுக்காக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. விஜய், அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்குமுன்பே இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்த ஆண்டின் கல்வி விருது விழா இன்று மே 30ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்று கௌரவிக்கப்பட்டனர். விழா தொடக்கத்தில் மாணவ – மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

இம்முறை மாநில அளவில் 12ஆம் வகுப்பில் முதல் இடம் பிடித்த மாணவிகளான ஓவியாஞ்சலி மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோஃபியாவுக்கு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகையுடன் வைரக் கம்மலும் பரிசாக வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பெற்றோர் மற்றும் சகோதரருடன் நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றபோது மிகுந்த நெகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்கள் இருவரும் 600ல் 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பேசும் போது விஜய் கூறியதாவது:
“ஒரே விஷயத்தை மட்டும் படித்து மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். நீட் மட்டும் தான் உலகமா? இந்த உலகத்தில் பல வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாசாரம் பற்றி பேசியிருந்தேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், நீங்கள் கொடுத்த வரிக்காசுகளை கொள்ளையடித்தே கொண்டுவந்த பணத்தை, வண்டி வண்டியாக உங்கள் முன்னிலையில் கொட்டுவார்கள். இதுவரை ஊழல் செய்யாதவர்களை தான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சாதி, மதம் போன்ற வேறுபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் உங்கள் கனவுகளைக் கடந்து செல்ல வேண்டும்” என்றார்.

மேலும், வரும் ஜூன் 3ஆம் தேதி மற்றும் ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் மாணவர்களை நேரில் சந்தித்து கல்வி விருதுகளை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த விழாவுடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top