Connect with us

தேர்தலுக்காக பச்சையாக நடிக்கும் எடப்பாடி பழனிசாமி – மாதவரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Featured

தேர்தலுக்காக பச்சையாக நடிக்கும் எடப்பாடி பழனிசாமி – மாதவரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி பச்சையாக நடித்து வருவதாக தமிழக முதல்வர் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாதவரத்தில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது :

தமிழகத்தின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்திற்கு வந்துள்ளேன் . திமுகவுக்கும் வட சென்னைக்குமான உறவு, தாய்க்கும் சேய்க்குமான உறவு.

இது மிக முக்கியமான தேர்தல்; இந்தியாவில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் பாஜகவும் பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு

மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்; சென்னையில் 3ஆவது ரயில் முனையம், பழவேற்காடு – கடப்பாக்கம் வரை மேம்பாலம் அமைக்கப்படும்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக பச்சையாக நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி; சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது அதிமுக அரசு தான் .

வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், திருவள்ளுவர் சிலைகளுக்கு காவிச்சாயம் பூசிய பாஜக-வை எதிர்க்காதவர் ஈபிஎஸ் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top