Connect with us

7 நாட்களில் DNA திரைப்படம் வசூலித்த தொகை என்ன தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியானது!

Featured

7 நாட்களில் DNA திரைப்படம் வசூலித்த தொகை என்ன தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியானது!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அதர்வாவிற்கு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சிறந்த திரைப்படமாக DNA அமைந்துள்ளது. மான்ஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தை பெற்ற இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன், ரமேஷ் திலக் மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. “இத்தனை நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படிதான் ஒரு கதையம்சமும், கதாபாத்திரம் நன்கு அமையப்பெற்ற திரைப்படம் வரவேண்டும் என எதிர்பார்த்தோம்” என ரசிகர்கள் தெரிவித்து, சமூக வலைதளங்களில் பெருமளவில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், DNA திரைப்படம் வெளியான 7 நாட்களில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 4.6 கோடி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றி அதர்வா மற்றும் படக்குழுவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top