Connect with us

ரசிகர்களின் அமோக வரவேற்புடன் DNA – 3 நாட்களில் செய்த வசூல்..

Featured

ரசிகர்களின் அமோக வரவேற்புடன் DNA – 3 நாட்களில் செய்த வசூல்..

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தமிழ் சினிமாவில் தனது இயக்குநர் பயணத்தை ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அந்த படத்திற்குப் பிறகு, நடிகர் எஸ்.ஜே. சூர்யாவை முன்னணி கதாப்பாத்திரமாக கொண்டு இயக்கிய மான்ஸ்டர் திரைப்படம் மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

மான்ஸ்டர் திரைப்படம் மூலம் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிய நெல்சன் வெங்கடேசன், அதன் பின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு பிறகு, அவர் இயக்கிய புதிய படம் DNA கடந்த வாரம் திரையிடப்பட்டது. அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், DNA திரைப்படம் மூன்று நாட்களில் பெற்றுள்ள வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, உலகம் முழுவதும் DNA திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 3.7 கோடி வருமானம் பெற்றுள்ளது. இந்த சாதனை, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் படக்குழுவிற்கு ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top