Connect with us

கேஸ் விலை ஏற்றம்! இந்தப் போக்கை திமுக எப்போது நிறுத்தும்? விஜய் கண்டனம்!

Featured

கேஸ் விலை ஏற்றம்! இந்தப் போக்கை திமுக எப்போது நிறுத்தும்? விஜய் கண்டனம்!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வு, சாதாரண மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இப்போது வாழ்வாதாரம் ஏற்கனவே சிரமத்தில் இருக்கிறது. இந்த விலை உயர்வு, மக்களை மேலும் வாட்டும் ஒரு தாக்குதலாக இருக்கிறது. ஓரளவாக மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வருவது குறித்து மக்கள் சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் விலை குறைக்கிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் விலை ஏறுகிறது. இது ஒரு பழக்கமாகி விட்டது. மக்கள் இது போன்ற நாடகங்களை புரிந்து கொண்டுவிட்டார்கள். விரைவில் பாடம் புகட்ட தயார் நிலையில் இருக்கிறார்கள். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் கூட, அதன் பயனை மக்கள் அனுபவிக்க முடியவில்லை.

திமுக அரசு கடந்த தேர்தலில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறைக்கு வரவில்லை. அணைத்து partiesக்கும் மக்கள் ஒரு கேள்வி எழுப்புகிறார்கள் – எப்போது உங்கள் வாக்குறுதிகள் நிஜமாகப் பயன்படும்?

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top