Connect with us

“இன்னும் 30 நாள் Shooting மீதம் இருக்கு..! வெற்றிமாறனின் விடுதலை 2 படத்தின் Latest Update!”

Cinema News

“இன்னும் 30 நாள் Shooting மீதம் இருக்கு..! வெற்றிமாறனின் விடுதலை 2 படத்தின் Latest Update!”

நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, சேத்தன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது விடுதலை படம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பிஜிஎம் என அனைத்தும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருந்தது. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கேரக்டர் குறைவான காட்சிகளையே கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் இந்த கேரக்டர் விரிவு படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் பிளாஷ்பேக் காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இதற்காக இருவருக்கும் de Aging தொழில்நுட்பத்தில் வயதை குறைத்துக் காட்ட வெற்றிமாறன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக முதல் பாகத்தை எடுத்தபோதே அதிகமான காட்சிகளை வெற்றிமாறன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டில் அவர் சில மாற்றங்களை செய்துள்ளதால் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் 30 நாட்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மஞ்சு வாரியர் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் இடம்பெறாத பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்டவர்களும் தற்போது இரண்டாவது பாகத்தில் இடம் பெற்றுள்ளனர். படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் வெற்றிமாறன் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நீண்ட காலங்களாக நடத்தப்படாமல் உள்ளது.

See also  கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் - கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top