Connect with us

சூர்யாவை டிரோல் செய்வோருக்கு எனது பதில்!” – பீனிக்ஸ் இயக்குநர் அதிரடி கருத்து..

Featured

சூர்யாவை டிரோல் செய்வோருக்கு எனது பதில்!” – பீனிக்ஸ் இயக்குநர் அதிரடி கருத்து..

விஜய் சேதுபதி கடந்த ஆண்டு ‘மகாராஜா’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய இரண்டு ஹிட் படங்களை வழங்கி ரசிகர்களின் மனதை வெற்றிகொண்டார். தற்போது அவர் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்க, அவரின் மகன் சூர்யா, இயக்குநர் அனல் அரசின் ‘பீனிக்ஸ்’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த ஜூலை 4ஆம் தேதி வெளியானது. தற்போது, இப்படத்தின் வெற்றி விழா மிகவும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில், பீனிக்ஸ் பட இயக்குநர் அனல் அரசு, ஒரு முக்கியமான உரையை நிகழ்த்தினார். அவர் தெரிவித்ததாவது:

“பீனிக்ஸ்’ படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது – நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை. இந்த படத்தின் மூலம் சினிமாவில் புதிதாக எட்டிப் பார்க்கும் பலரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்,” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top