Connect with us

“ஏழு கடல் ஏழு மலை படத்தின் Glimpse வீடியோ வெளியானது! Viral Video!”

Cinema News

“ஏழு கடல் ஏழு மலை படத்தின் Glimpse வீடியோ வெளியானது! Viral Video!”

பாலுமகேந்திராவிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு கற்றது தமிழ் படத்தை முதன்முறையாக இயக்கினார் ராம். ஜீவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. ஆனால் இப்போது பலரும் அதனை கொண்டாடிவருகிறார்கள்.

அந்த அளவுக்கு அப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் கூர்மையாக அமைத்திருப்பார். குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் படித்தவரின் நிலைமை என்னவென்பதை பொட்டில் அடித்து சொல்லிய படம். அதனையடுத்து அவர் இயக்கிய தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்கள் அனைத்துமே கிளாசிக். தரமணி மட்டும் கொஞ்சம் சர்ச்சையை சந்தித்தாலும் அதுவும் பாராட்டையே பெற்றது.

பேரன்பு படத்துக்கு பிறகு அவர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோரை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். முன்னதாக இந்தப் படமானது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் பிக் ஸ்க்ரீன் போட்டிக்கு படம் தேர்வாகியிருக்கிறது.

இதுகுறித்து படக்குழு சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டி பிரிவு பிக் ஸ்க்ரீன் விருதுக்கு ஏழு கடல் ஏழு மலை படம் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி, இசையில் நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா,

ஒளிப்பதிவை சிறப்பாக கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வு குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் க்ளிம்ப்ஸ் காட்சியானது இன்று மாலை 5.01 மணிக்கு வெளியானது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துமா மும்பை..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top