Connect with us

விஜய்யுடன் அமரன் பட இயக்குநர் – வைரல் போட்டோ..!!

Cinema News

விஜய்யுடன் அமரன் பட இயக்குநர் – வைரல் போட்டோ..!!

நடிகர் விஜய்யுடன் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இருக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ள திரைப்படமே அமரன் .

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தது நாம் அனைவர்க்கும் தெரியும் இந்நிலையில் அமரன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் ராஜ்குமார் தளபதி விஜய் உடன் இருக்கும் புகைப்படம் செம வைரலாக வலம் வருகிறது.

இந்த புகைப்படம் துப்பாக்கி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா – சல்மான் கானுடன் புதிய படம்?

More in Cinema News

To Top