Connect with us

“த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான்..! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு!”

Cinema News

“த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான்..! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு!”

லியோ படம் கடந்த மாதம் வெளியானது. இதில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படமானது விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசுல் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதுவரை மொத்தம் 600 கோடி ரூபாய் வசூலை படம் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். இத்தனை வருடங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

மன்சூரின் அந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுப்பிய த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. என்னுடன் நடிக்க அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால் அவர் போன்ற ஒரு கேவலமான மனிதருடன் நான் நடிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கு மேலும் என்னுடைய கரியர் முழுவதும் அவருடன் நடிக்கமாட்டேன் என்பது உறுதி. இவரைப் போன்றவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு இழுக்கு. மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்த சூழலில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர் வெறுக்கத்தக்க மனிதர்.. வெட்கப்படுகிறேன் மன்சூர் அலிகான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

See also  அசாமில் இன்று அசத்தப்போவது யார்..? ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top